என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வர்த்தகம் பாதிப்பு"
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஓணம் பண்டிகைக்கு ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பின்னலாடை ஆகியவை தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-
கேரள மாநிலத்துக்கு கோவை மார்க்கெட்டில் இருந்து தினசரி ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். ஓணம் பண்டிகை காலங்களில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் டன் காய்கறிகள் கொண்டு செல்லப்படும். தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் காய்கறிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் ரூ. 6 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துக்காக கேரளாவை சேர்ந்த கோவில் நிர்வாகத்தினர், கல்வி நிறுவனத்தினர் கோவையில் உள்ள பூமார்க்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்கி செல்வது வழக்கம். தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பூக்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. #KeralaRain #Onam
சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் பெருமளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய வியாபார சந்தையான ஒட்டன்சத்திரத்தில் இருந்து பெரும்பாலான ஊர்களுக்கு காய்கறிகள் அனுப்பவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இந்த மில்களுக்கு தேவையான பஞ்சு மற்றும் நூல் வரவில்லை.
மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் நூல்கள் தேக்கம் அடைந்துள்ளது. மூலப்பொருட்கள் வராததால் 3 சிப்டுகள் இயங்கி வந்த ஆலைகளில் தற்போது 2 சிப்டுகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வரும் பருப்பு, மளிகை பொருட்கள், கட்டுமான பொருட்கள் ஆகியவை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கும் நிலையில் உள்ளனர்.
கடந்த 4 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகள், மலர்கள் ஆகியவை உரிய நேரத்தில் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால் அவை அழுகி விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் லாரிகள் போராட்டம் முடிவுக்கு வந்தால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பல்வேறு தரப்பினரும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். #LorryStrike
18 சதவீத வரிவிதிப்புடன் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 20-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் மணலூர்பேட்டை சாலை, அவலூர்பேட்டை சாலை போன்ற இடங்களில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட மண்பாடி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஞானமூர்த்தி கூறுகையில், நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
எங்கள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 500 மண்பாடி லாரிகள் ஓடவில்லை. மற்ற லாரிகள் என எடுத்து கொண்டால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.
லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தினால் மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடிக்கு மேல் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.’ என்றார்.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் வங்கி துறையில் செயல்பட்டு வரும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒன்பது தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1.11.2017 முதல் வழங்கப்பட வேண்டிய 11-வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் எந்தவித நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என்று கூரிய இந்திய வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்னும் ஒரு சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு வங்கியில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் வியாபாரிகள் மற்றும் சுப காரியங்கள் வைத்திருப்போர் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பணம் எடுக்க முடிவில்லை.
தஞ்சையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தனர். தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மண்டலத் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், இந்திய வங்கி ஊழியர் செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் 30 தலைமை வங்கிகள் உள்ளன. 275 கிளை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். தற்போது 11-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் ஏற்படாததாலும் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சம்பள உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இன்று வேலை நிறுத்தம் தொடங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில் பொது துறை மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 372 கிளைகள் உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூரில் உள்நாட்டு, வெளிநாட்டு பண பரிவர்தனை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்று மட்டும் சுமார் 100 கோடிக்கு பண பரிவர்த்தனை மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நாளையும் தொடர்வதால் இரு நாட்களும் சேர்த்து திருப்பூர் மாவட்டத்தில் 200 கோடிக்கு வர்த்தகம் மற்றும் பண பரிவர்த்தனை பாதிக்கப்படும். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர் பனியன் தொழிலாளர்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். #Bankstaff #strike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்